14 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரை சந்தித்தப் பிலிப்பைன்ஸ் பெண் கைதி

0
27

 

துபாய் பெண்கள் சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபி நிருபர்களுக்கு பேட்டியில்  கூறியதாவது:-

அமீரகத்தில் இந்த ஆண்டு சகிப்புத்தன்மை ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி துபாய் போலீஸ் துறை சார்பில் கைதிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நீண்டகாலம் பெற்றோர் அல்லது குடும்பத்தினரை சந்திக்காத கைதிகள் மற்றும் அவர்களுடைய சின்ன, சின்ன ஆசைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக தனது பெற்றோரை சந்திக்கவில்லை என கூறியிருந்தார்.

அதனை கவனத்தில் கொண்டு துபாய் போலீஸ்துறை சார்பில் அந்த பெண்ணின் பெற்றோர் துபாய்க்கு வரவழைக்கப்பட்டனர். கைவினை பொருட்களை வடிவமைப்பதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அரபி, ரஷியா, இந்தி மற்றும் நைஜீரிய மொழியை கற்றுக்கொண்டுள்ளார். அந்த பெண்ணின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு மனித நேயத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அவரது மாற்றங்களை பார்த்தும், ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்தியதற்காகவும் போலீசாருக்கு அந்த பெண்ணின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். அவரின் நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here