14-வது பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதமா?

0
330

மக்களவை 14-வது பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதத்தில்தான் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ சிறீ முகம்மது நஸ்ரி அஸிஸ் கூறுகிறார்.

கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவையில், நாடாளுமன்றம் கூடும் தேதிகளை இந்த ஆண்டு மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 6 க்குள் இருக்கும் என உறுதிப்படுத்தினர்.

இதனிடையே, அதுவே 13-வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டமாக இருக்கலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நாடாளுமன்றத்தின் 222 இடங்களில் பாரிசான் நாஷ்னல் 132 இடங்களைப் பெற்றுள்ளனர். எதிர்க்கட்சியான டி.ஏ.பி (36). பாஸ் (14) பி.கே.ஆர் (28), பிஎஸ்எம் (1), பான் (6), வாரிஸான் (2), பிபிபிஎம் (1) மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் (2) ஆகியோர் உள்ளனர்.

14 வது பொதுத்தேர்தல் இந்த ஆண்டு  ஆகஸ்டு மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.