ஷா அலமில் தீக்கிரையான 196 கடைகள்!

0
164

ஷா அலாம், நவ 12- அதிகாலை 5 மணியவில் செக்சன் 24, அப்டவுன் ஷா அலாமில் பழையக் கடைத் தெருவில் 425 லிருந்து 196 கடைகள் தீப்பற்றிக்கொண்டன.

காலை 2.57 மணியவில் அழைப்பைப் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழு 3.03 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு துணை இயக்குனர், முஹாமத் சாணி ஹாருன் கூறினார்.

பிபிபீ ஷா அலாம், கொத்தா அங்கேரி மற்றும் கொத்தா ராஜா என்னும் முன்று பகுதியிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்கள் தீயை அணைக்க உதவியுள்ளனர்.

40 விழுக்காடு அழிவை ஏற்படுத்திய இத்தீச்சம்பவத்திற்கான காரணத்தைப் போலீஸ் விசாரித்து வருகிறது.

மேலும் இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.