20 மணி நேரம் சிறுவனை காணவில்லை: தேடுதல் தொடர்கின்றது.

0
42

மும்பையில் தொடர்ந்து பெய்ந்து வரும் கனத்த மழையினால்,2 வயது குழந்தை கால்வாயில் விழுந்தான். கடந்த புதன் அன்று  இரவு உணவுக்குப் பின் சாலையில் தண்ணீர் தேங்கி இருந்ததால்  வீட்டுக்கு அருகில் உள்ள  கால்வாயில் திவ்யன்ஷ் எனும் இரண்டு வயது குழந்தை  தவறி விழுந்தது. பல ம?ணிநேரம் காணமல் போன அந்த சிறுவனை தேடும் பணியில் ஈடுப்பட்ட அவனது பெற்றோர்கள் , பிறகு ஒரு வீட்டின் ரகசிய கேமிராவின் வழி அவன் கால்வாயில் விழுந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. திறந்து கிடக்கும் கால்வயை மூடச் சொல்லி பல தடவை புகார் கொடுத்திருந்தும் அது தொடர்பான பொது பணி அதிகாரிகள் அலட்சியமாக இருந்தே வருகின்றனர். என் குழந்தையின் மரணத்திற்கு பொதுப்பணியாளர்களே காரணம் என குழந்தையின் இறப்பால் மனமுடைந்த  தந்தை சுராஜ் சிங் கூறினார்.  மேலும், குழந்தை காணவில்லை என புகார் கொடுத்தப்பின் குழந்தையைத் தேடும் பணியும் மிக தாமதமாக மறுநாள் காலையில்தான் தொடங்கப்பட்டது என வருத்தத்துடன் அவர்  கூறினார். குழந்தையைத்தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.