200 கிலோமீட்டர் மனித சங்கிலி போராட்டம்: ஸ்பெயினை கலக்கிய பஸ்க்யூ மக்கள்

0
194

ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலைக்கோரிபஸ்க்யூ பகுதி மக்கள்பெருந்திரள்மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா பகுதி மக்கள், அண்மைக்காலமாக தனி நாடு கோரி,  மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களது வரிசையில் தற்போது பஸ்க்யூ பகுதி மக்களும் இணைந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலை வேண்டி, பஸ்க்யூ நகர மக்களும்  போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் ஆர்ப்பரித்து நின்று, சுதந்திர முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தை, குரே எஸ்கு தாகோ என்ற அமைப்பு முன்னின்று நடத்தியது. இதில் ஏராளமான கேட்டலோனியா ஆதரவு அமைப்புகளும் பங்கேற்று, மக்களுக்கு ஆதரவாக துணைநின்றனர்.

மனித சங்கிலியில், 1,75,000 பேர் கலந்து கொண்டதாகவும், போராட்டத்தில் எந்தவித வன்முறைகளும் நிகழவில்லை என்றும்  பஸ்க்யூ நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.