2014-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை – மத்திய அரசு

0
69
2014-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ள தகவலில் “2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு டிசம்பர் வரையில் 1,213 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களில் 183 பேர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார். இதே காலக்கட்டங்களில் நாட்டின் பிற பகுதிகளில் 6 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here