2018 ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது – தொடக்கத்திலேயே 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்

0
172
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார்.
இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதில்,
சிறந்த துணை நடிகராக சாம் ராக்வெல்லும்  (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி), சிறந்த துணை நடிகையாக ஆலிசன் ஜேனியும் (ஐ, டோன்யா) ஆஸ்கர் விருதை பெற்றுள்ளனர்.
சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் ஒலி இணைப்பு விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டங்கிர்க் படம் கைப்பற்றியது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் டங்கிர்க் படத்திற்கே கிடைத்துள்ளது.
சிறந்த வெளிநாட்டு படமாக சிலி நாட்டைச் சேர்ந்த எ பென்டாஸ்டிக் வுமன் தேர்வாகியுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக கோகோவும், சிறந்த அனிமேஷன் குறும்படமாக டியர் பாஸ்கட்பால் படமும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது கிடைத்திருக்கிறது. இதுதவிர, ஆடை வடிவமைப்புக்கான விருதை பாண்டம் த்ரெட் படமும், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை டார்க்கஸ்ட் ஹார் படமும் வென்றுள்ளன.
சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை ஐகரஸ் படம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here