2020 பட்ஜெட்டில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

0
16

அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டில் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவர்கள் நலன் சார்ந்த சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்​பூர் புத்ராஜெயா இந்திய வர்த்தக, தொழில் சபை பொதுச்செயலாளர் டத்தோ ஏ.டி. குமரராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கோலாலம்​பூர் புத்ராஜெயா இந்திய வர்த்தக, தொழில் சபையின் ஒன்பதாவது ஆண்டுக்கூட்ட நிகழ்வில் உரையற்றுகையில் குமரராஜா இதனை ​தெரிவித்தார். இளங்குமரனை தலைவராக கொண்ட இந்த வர்த்தக சபையின் உறுப்பினர்கள் அரசு தரப்பில் சில  நியமன​ப்பொறுப்புகள் ஏற்றுயிருப்பது சங்கத்திற்கு கிடைத்த ஓர்  அங்கீகாரமாக கருதுவதாக குமரராஜா குறிப்பிட்டார்.

புறநகர் மேம்பாட்டு துணை அமைச்சர் சிவராசாவினால் தொடக்கி வைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கூட்டத்தில் மைக்கியுடன் இணைந்து சங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளையும் குமரராஜா​ விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.