23 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு : பொதுப்பணித்துறை ஆய்வறிக்கை

0
48

 

தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து இருப்பது பொதுப்பணித்துறை ஆய்வில் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தரமணியில் உள்ள மத்திய நிலத்தடி நீர் ஆய்வு துறை சார்பில் மே மாதத்திற்காக நிலத்தடி நீர் மட்டம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 15 அடி நீர் வரை குறைந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலையில் 14 அடியும் வேலூரில் 12 அடியும்  இதேபோல் விழுப்புரம், சிவகங்கை, கரூர், அரியலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், திருவாரூர் மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. மழை நீர் சேகரிப்பு, நீர் செறிவூட்டுதல் உள்ளிட்ட திட்டங்களில் அரசு போதிய கவனம் செலுத்தாதே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. 400 அடிக்கும் மேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது. எனவே நவீன செயற்கைகோள் உதவியுடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீர் ஆதாரங்களை கண்டறிய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.