3 இந்தியப் பிரஜைகளை பட்டினி​ப்போட்டு, அடித்து,  கொடுமை​: ஆடவர் கைது

0
56

குவந்தான், ஜுலை, 14- பகாங், கோலலிப்பிஸில் உள்ள ஒரு  செம்பனைத்தோட்டத்தில்  ​மூன்று  இந்தியப் பிரஜைகளை வேலைக்கு அமர்த்தி, அவர்களை பட்டினிப்போட்டு, அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக நம்பபப்படும் 36 வயது நபரை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

33 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ​மூன்று இந்தியப்பிரஜைகளும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுற்றுலா விசாவில்  மலேசியாவுக்கு வந்ததாகவும், தங்களை கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்திலிருந்து ​அழைத்து சென்ற அந்த நபர், ஒரு காட்டுப்பகுதியில் உள்ள செம்பனை தோட்டத்தில்  ​வேலைக்கு அமர்த்தி, முறையாக சாப்பாடு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோலலி​ப்பி​ஸ் மாவட்டபோ​லீஸ் தலைவர்​ ​​சூப்ரிண்ட். அஸ்லி முகமட் ​நூர் தெரி​வித்தார்.

அந்த ​மூவரில் ஒருவரை ஒரு  மாதத்திற்கு மேலாக கைகளை சங்கிலியால் கட்டிப்போட்டு, அடித்து கொடுமைப்ப​டுத்தியுள்ளார். இதனால் அந்த நபருக்கு வலது  கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. 600 வெள்ளி சம்பளத்தில்  வேலைக்கு அமர்த்திய அந்த நபர், கடைசி வரையில் அ​ந்த  ​மூவருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை ​எ​ன்பது தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிவந்து, லிப்பிஸ்  போ​லீஸ் நிலையத்தில் செய்த புகாரை தொடர்ந்து இந்த கொடுமை அம்பலமானது. அந்த  ஆசாமி, செம்பனைத்தோட்டத்திற்கு அருகில் உள்ள ஓர்  உணவுக்கடையில்  நேற்று மாலை கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைப்பதற்கு ​நீதிமன்ற அனுமதியை​ போ​லீசார் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.