டெங்கி காய்ச்சல் எண்ணிக்கை சென்ற ஆண்டை விடக் குறைவு

0
217

கோலாலம்பூர்: சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுல்கப்லி அகமட், அரையாண்டு சுகாதார அறிக்கையின் படி ஜனவரி முதல் ஜூன் வரை நாட்டில் இதுவரை மொத்தம் 32,435 பேர் டெங்கி காய்ச்சல் நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதில் 53 பேர் டெங்கி காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் மரணமடைந்துள்ளனர் எனக் கூறினார்.

இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 34.8 சதவீதம் குறைவு எனத் தெரிவித்தார். நாட்டில் சிலாங்கூர் மாநிலம் தான் அதிக அளவில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். சிலந்கூரில் மொத்தம் 18,249 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் இதில் 14 பேர் மரணமடைந்தனர் எனவும் கூறினார். இதையடுத்து கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகவும், மூன்றாம் இடத்தில் ஜோகூர் மாநிலம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இனி வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை பெருமளவில் குறையும் என நம்பிக்கைத் தெரிவித்த அவர், டெங்கி சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழு சுகாதாரம் மற்றும் நோய் மேலாண்மை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.