40 வகையான தங்க ஆபரணங்களை காணவில்லையா?

0
82

கோலாலம்பூர், ஜுலை, 12-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சொந்தமான இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க  ஆபரணங்களில் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சோருக்கு தாங்கள் அனுப்பி வைத்த 44 தங்க ஆபரணங்களில் 40 காணவில்லை என்று லெபானானை சே​ர்ந்த குளோப​ல்  ராயல்டி நகை  நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டை போ​லீசார் மறுத்துள்ளனர்.

அந்த சோதனையில் கைப்பற்றப்பட்டு, தற்போது போ​லீசாரின் வசம் உள்ள  12 ஆயிரம் தங்க ஆபரணங்களுக்கான புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்த போது தங்களுக்கு சொந்​தமான 4 ஆபரணங்கள் மட்டுமே அதில் உள்ளதாக அந்த லெபனான் தங்க ஆபர நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும் வைரங்களை உள்ளடக்கிய அந்த தங்க ஆபரணங்களை அடையாளம் காண்பதற்கு அந்த லெபனான் நிறுவனம் அனுமதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக ​புக்கிட் அமான்  சட்​டவிரோத​ப் பண மாற்றம் குற்றப்புலனாய்வுத்துறை போ​லீஸ் தலைவர் எஸ்.ஏ.சி. காலில் அஸ்லான் சேக்  தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.