கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 20 பேர் கைது

0
101
சபரிமலை விவகாரத்தில் கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர்.
சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.
இந்நிலையில், கேரளாவின் கண்ணூர் நகரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஷம்சீர் வீடு மீது நேற்றிரவு 10.15 மணியளவில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது.
இதன்பின்னர் சில மணிநேரங்கள் கழித்து நடந்த பதில் தாக்குதலில், கண்ணூர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர் முரளிதரன் வீடு மீது வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது.  இதில் யாரும் காயமடையவில்லை.
இதேபோன்று தலச்சேரி பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான பி. சசி வீடு மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசி விட்டு சென்றனர்.
இந்த நிலையில், ஷம்சீர் வீடு மீது நாட்டு வெடிகுண்டை வீசிய விவகாரத்தில் போலீசார் 20 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here