68 டன் குருனை அரிசியை அக்செம் கைப்பற்றியது

0
59

அலோர்ஸ்டார்,அக் 11- தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டதாக அறியப்படும் 68 டன் எடைக்கொண்ட RM 200,000 மதிப்பிலான குருனை அரிசி நேற்று போக்காக் சேனாவில் இரண்டு டிரெய்லர் லாரிகளை முடக்கியப்பின் மலேசிய எல்லை கட்டுப்பாட்டு முகாமால் (அக்செம்) கைப்பற்றப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெற்ற தகவலின் அடிபடையில் அந்த இரண்டு டிரெய்லர்கள் மாலை 4.30 மணியளவில் அக்செம் உறுப்பினர்களால் தடுத்துவைக்கப்பட்டது.

பிராணிகளின் உணவு என நம்பப்படும் அந்த குருனை அரிசியை, சந்தையில் விற்கப்படுவதற்கு முன்னர் உள்ளூர் அரிசியுடன் கலக்கப்படும் நோக்கம் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிரோம் என மாநில அக்செம் கொமான்டர், அப்துல் லாதிப் அப்துல் ரஹ்மான் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here