925.1 கோடி வெள்ளி 1எம்டிபி பணத்தை அரசாங்கம் மீட்டெடுத்தது

0
44

கோலாலம்பூர், ஜூலை 13- 1எம்டிபி தொடர்பாக பயன்படுத்தப்பட்ட பணத்தில் இதுவரை 925 கோடி வெள்ளி  திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மலேசியப் பொருளாதார அமைச்சர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார்.

திரும்பப்பெறப்பட்ட அந்த 925 கோடியில் மன்ஹத்தானில் உள்ள பார்க் லேன் ஹோட்டலை விற்ற பணத்தில்  567.8 கோடி வெள்ளி பெரிய அளவில் பெறப்பட்டது. அதனை அடுத்து,ரேட் கிரானைட் பிச்சர்ஸ் கம்பனியிடம் இருந்து 238 கோடியும் சிங்கப்பூர் அரசாங்கத்திடமிருந்து 97.3 கோடியும் திருப்பப் பெறப்பட்டது என லிம் மேலும் கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள 1எம்டிபி பணத்தைத் திரும்ப பெறுவதில் பெரும் பங்காற்றிய மலேசிய லஞ்சத் தடுப்பு வாரியம் , மலேசியத் தேசிய போலீஸ் படை மற்றும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கது.  தொடர்ந்து, இதே போன்று இன்னும் எஞ்சி இருக்கும் 1எம்டிபி பணத்தைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டப்படும் என்றார் லிம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.