தேர்தல் நாள் அன்று தன்னை இருமுறை அழைத்த நஜிப் – அன்வார்

0
147

கோலாலம்பூர்: தேர்தல் நாளான மே 9ம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், முன்னால் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தன்னை இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இது பற்றி அவர் ரீயுட்டெர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மிகவும் பதட்டமான நிலையில் நஜிப் தன்னிடம் பேசியதாகவும், தான் என்ன முடிவு எடுப்பது என்று தனக்கு தெரியவில்லை என்று கூறியதாகவும்;  அதற்கு தான், எந்த முடிவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், இது மக்களின் முடிவு நன்மையோ, தீமையோ அதை ஏற்றுக்கொள்வதே நல்லது என்று தான் கூறியதாகவும் கூறினார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின் தன்னை மறுபடியும் அழைத்த நஜிப், தான் மிக குழப்பத்தில் இருப்பதாகவும் என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.

அதற்கு தான் எதுவாக இருந்தாலும் முதலில் மக்களின் முன் பேசும்படியும், காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று தான் கூறியதாகவும் தெரிவித்தார்.

நஜிப் தன்னுடைய நண்பர் என்றும், அரசியல் களம் ஒவ்வொருவரையும் வேறு வேறு பாதையில் பயணம் செய்ய வைத்து விட்டது என்றும், தனக்கு இப்பொழுது யார் மீதும் வருத்தமோ அல்லது பழியுணர்ச்சியோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் செயல்பாட்டில் அனைத்தும் சீராக செல்வதாகவும், விரைவில் அனைத்து தவறுகளும் சரி செய்யப்பட்டு மலேசியா முன்னர் போல் வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நம்பிக்கைத் தெரவித்தார். – பிரியா

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.