புத்ராஜெயா: ஜூலை 20 ஆம் தேதி பாலாகோங் சட்டமன்ற டிஏபி கட்சி உறுப்பினர் எடி எங் தியோன் சி சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலாகோங் சட்டமன்ற இடைத்தேர்தல் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் துணைத்தலைவர் டான்ஸ்ரீ ஒத்மான் மாஹ்மூட் இன்று அறிவித்தார் . இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறும் என்றார். வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 21 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.