மஸ்ஜிட் இந்தியா தீபாவளி சந்தை இடமாற்றம் – காலிட் சமட்

0
64

கோலாலம்பூர்,நவ 3- மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தீபாவளி சந்தை, புதிய மற்றும் சிறந்த மற்றொரு தளத்துக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமாட் கூறினார்.

“இப்பகுதியில் நடைபெறும் இறுதி தீபாவளி சந்தை இது.நாங்கள் அங்கு மேம்பாடு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்,” என அவர் நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஃபீஸ்டா திட்டத்தை தொடக்கிவைத்தப் போது கூறினார்.

வியாழக்கிழமை பொதுமக்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூட்டரசு பிரதேச அமைச்சு, கோலாலம்பூர் நகராண்மை கழகம்(DBKL) மற்றும் மக்கள் புகார் மையம்(PAR) ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி நவம்பர் 5ஆம் தேதி முடிவடையும்.

பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த வயதான மற்றும் அதரவற்ற 100 பேர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here