AADK-வின் புதிய தலைமை இயக்குநராக டத்தோஶ்ரீ சூல்கிப்ளி நியமனம்

0
108

கோலாலம்பூர், ஆகஸ்ட்.15- தேசிய போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பின் புதிய தலைமை இயக்குநராக புக்கிட் அமானின் உள்துறை பாதுகாப்பு, பொது அமைதித் துறையின் இயக்குநர் டத்தோஶ்ரீ சூல்கிப்ளி அப்துல்லா நியமிக்கப்பட்டார்.

டத்தோ டாக்டர் அப்துல் ஹலிம் முகமட் உசினின் பணி ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு பதிலாக சூல்கிப்ளி அப்பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

புக்கிட் அமான் உள்துறை பாதுகாப்பு, பொது அமைதித் துறையின் இயக்குநராக பதவி வகிக்கும் முன்னர் சூல்கிப்ளி, அரச மலேசிய போலீஸ் படையில் பல உயர் பதவிகளை வகித்திருக்கிறார்.

அவர் கிளந்தான், பேராக், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களின் போலீஸ் தலைவராக  இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here