ஜாக்கீர் விசயத்தில் அமைச்சரைவை முடிவு? தமிழ்மணி கேள்வி?

0
43

கோலாலம்பூர்- ஆக-24-ஸாகிர் நாய்க்கை- மலேசியாவில் தங்குவதற்கான அனுமதியை அமைச்சரவைத்தான் வழங்கியுள்ளதாகவும்,அவருக்குகான அனுமதியை எந்தவொரு தனிநபரும் வழங்கவில்லையென்று உள்துறைத் துணையமைச்சர், டத்தோ, மர்ஜூ சூக்கி யாயா தெரிவித்துள்ள- கருத்துக்குப் பின்னாலும் முன்னாலும் ஏகபட்ட சட்ட முரண்பாடுகள் இருப்பதாக பிரபல ஊடகவியலாளரும் சமூகப் போராளியுமான முனைவர் பெரு.அ. தமிழ்மணி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

முதலில் அன்னிய நாட்டவரான ஜக்கீரை இங்கு தங்க எந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிப் பெறப்பட்டதென்று  அமைச்சர் விளக்க வேண்டும், இப்போது அமைச்சர் குறிப்பிடுகிற காலமும் அதற்கு முன்பே; அவர் இங்கு தங்கியுள்ளதற்குமான தேதிவாரியான பதிவுகளையும் அரசாங்கம் தெளிவுப்படுத்தவேண்டுமென்று; தமிழ்மணி கேட்டார்.

மேலும் ஜாக்கீர் விவகாரமாக இதுவரை, 18- வழக்குகள் பல்வேறுத் தரப்புகளால் பதிவுற்றிருக்கும் நிலையிலும், துணையமைச்சரின் விளக்கமானது மேலும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் அவரின் சொந்த நாட்டால் குற்றவாளியென்று குற்றஞ்சாட்டப்பட்டவரை- எப்படி இங்கு தங்க அனுமதி வழங்கப்பட்டது?

இப்படி தமது சொந்த நாடுகளில் குற்றச்சாட்டுகளை ;எதிர்நோக்க முடியாமல்; இங்கு அடைக்கலம் கோருகிறவர்களுக்கெல்லாம் நமது அரசு அடைக்கலம் கொடுக்குமா?

அத்தகைய முடிவில் தான் ஜக்கீரை நமது நாடு அனுமதித்தா? என்பதை  நாட்டுமக்களுக்கு துணையமைச்சர் அம்பலப்படுத்த வேண்டும்?

இதே நிலைபாட்டைத்தானே; மற்ற நாடுகளும் நமது நாட்டால் தேடப் பட்டு வரும்; குற்றவாளிகளான ஜோலோ, சீரோல் அஷாஹாக்  விசயத்திலும்  கடைப் பிடிப்பதாக ஏன் கருதக் கூடாது? அது குற்றமென்றால் ; ஜாக்கீர்  விசயத்தில் மட்டும் என்ன நியாயம் இருப்பதாக அமைச்சரவைக் கருதுகிறது என்று  தமிழ்மணி கேள்வி எழுப்பினார்.

எனவே; மேற் குறிப்பிட்டுள்ள இருவரும் நமது நாட்டிற்கு வந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று அவர்கள் சொல்லுவதிலும், நாய்க் இந்தியாவுச் சென்றால் அவர் உயிருக்கு உத்தரவாதமில்லையென்று  பிரதமர் மகாதீர் சொல்லுவதற்கும்  என்ன முரண்பாடுகள் இருக்கிறதென்று அமைச்சரவை விளக்கப்படுத்தவேண்டும்?

அதாவது; மலேசியாவால் தேடப்படும் குற்றவாளிகளுக்கும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிக்கும் இந்த விசயத்தில் என்ன முரண்பாடுகள் இருக்கிறதென்று அடுத்த அமைச்சரவையில் மகாதீர் விவரிக்க வேண்டுமென்று முனைவர்- தமிழ்மணி கேட்டார்?

அதேவேளை; இப்படி அடைக்கலம் தேடிக்கொண்டுள்ள நாட்டிலுள்ள மக்களையே விசுவாசமற்றவர்கள், அவர்களை நாட்டை விட்டு  விரட்ட வேண்டுமென்று பேசியவரை தொடர்ந்து இங்கு தங்க அனுமதித்திருப்பானது எந்தவகையில் சொந்தநாட்டு மக்களுக்கான பாதுக்காப்பை அமைச்சரவை எடுத்துள்ளது?

என்பதையும் அமைச்சரவைத் தெரிவிக்க வேண்டுமென்று எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.