கேமரன் மலைத் தேர்தல் கணைகள் (1)

0
161

கேமரன் மலை நாடாளுமன்றத்திற்கு, ஹராப்பானுக்கு ஏன் ஆதரவளிக்கக் கூடாது?

ஐந்து காரணங்கள்.

ஒன்று-

ஹராப்பான் மக்களுக்கான தேவையில் சேவையில்ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களாகியும் கவனம் செலுத்துவதை விடுத்து; தேசிய முன்னணியின் தலைவர்கள் மீது; வழக்குகளை மட்டுமே பதிவிட்டு, பயமுருத்தி அதன் மூலம் பெர்பூமிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் தான் இதுவரை இறங்கியுள்ளது.

இரண்டு-

ஆட்சிக்கு வந்த ஒரேமாதத்தில், கெஅடிலானில் பிளவும் அன்வார்-அஸ்மினுக்குமான இருதுருவ மோதலுமாகி; அஸ்மினை வலைத்து, அதன் வழி அடிலானிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெர்பூமிக்கு கொண்டுவர  மறைமுகச் சதியை மகாதீர் உருவாக்கி உள்ளார்!

மூன்று-

நடப்பு அரசாங்கத்தில் அடுத்த பிரதமர் அன்வாரென்று, அறிவிப்போடு சரி; அதற்குப்பின்னால் ,தனது மகனான முக்கிரீசை  பிரதமராக்கும் திட்டத்தினை மகாதீர் வைத்துள்ளதால்,  ஹராப்பானில் புகைச்சலை உண்டுப் பண்ணியுள்ளார்!

நான்கு-

முன்னைய தேசிய முன்னணி ஆட்சியில் மகாதீரின் மகன்களின் வர்த்தகப் பொருளாதார, பேராசைக்குப் பணியாத  நஜிப்பு இன்று பல வழிகளில் பலி வாங்கப்படுகிறார்; அதனால் ஹராப்பான ஆட்சி மகாதீர் குடும்பத்திற்கு மட்டுமே  தேவைப்படுகிறது.

ஐந்து-

இன்றைய ஹராப்பான் கூட்டணியானது; மகாதீர், அன்வார், லிம் கிட் சியாங், கர்ப்பால் சிங்,மாட் சாபு, போன்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசியலுக்கும், ஆட்சிக்கும் பிழைப்பு நடத்த தேவைப்படுவதாலே, மக்கள் நலன் இதனால், முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.