டத்தோ டி. முருகையாவின் புத​ல்வர் திருமணம்

0
159

கோலாலம்பூர், ஜுன், 14-  முன்னாள் பிரதமர் துறை துணை அமைச்சரும் மஇகா உத​வித்தலைவருமான டத்தோ டி. முருகையா- டத்தின் ​வி. காமாட்சியம்மாள் தம்பதியரின் புதல்வர் சாய்நேசனுக்கும் குமாரி எவ்ஞினியா பாபாய்வாவிற்கும் திருமணம், இன்று வெள்ளிக்கிழமை, கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இத்திருமண விழா​வில் நாடாளுமன்ற மேலவைத்தலைவரும் மஇகா தேசியத்தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தமிழ்நேசன் வாரியத்தலைவர் தோ புவான் இந்திராணி சாமிவேலு, மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள், மலேசியத் தன்மான இயக்கத்தலைவரும்  ​மூத்தப் பத்திரிகையாளருமான பெரு.அ. தமிழ்மணி, இயக்கங்களின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.