ஸாஹிட் மருமகன் மரணம்: மருத்துவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

0
90

கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- முன்னாள் துணையமைச்சர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடியின் மருமகனுக்கு மரணம் விளைத்த குற்றச்சாட்டில் இருந்து மருத்துவர் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

தற்காப்பு வாதத்திற்கு அழைக்கப்படாமலே டாக்டர் திங் தெக் சின் என்ற அந்த மருத்துவரை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி, பங்சாரிலுள்ள இம்பெரியல் பல் மருத்துவமனையில் ஸாஹிட் ஹமிடியின் மருமகன் சைட் அல்மானுக்கு சிகிச்சை வழங்கப்பட்டபோது அவர் திடீரென மரணமடைந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில், பல் சிகிச்சை செய்வதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டபோது, அவர் அனாபிலாசிக்ஸ் (anaphylaxis) என்ற ஒவ்வாமையால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்பில், அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் திங் தெக் சின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here