வங்காதேசத்தொழிலாளர் தருவிப்பு மறுபரி​சீலனை செய்யப்படுமா?

0
46

கோலாலம்பூர், ஜுலை, 12-

​மலேசியாவிற்கு வேலை ​செய்வதற்கு மேலும் அதிகமான வங்காளதேசத்தொழிலாளர்களை தருவிப்பதற்கு  மலேசியாவும் வங்காளதேசமும் அடுத்த மாதம் கருத்திணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருப்பதாக வங்காளதேச  அமைச்சர் கூறியிருப்பது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பரவலான அதிருப்தியையும் ஏமாற்றத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மலேசியாவில் 4 லட்சம் வங்காளதேசத்தொழிலாளர்கள் வேலை  செய்து வருவதாக அந்நாட்டின் அமைச்சர் இம்ரான் அகமட் கூறியுள்ளார். இந்நிலையில்​​ மேலும் அதிகமான வங்காளதேசத்தொழிலாளர்களை  வரவழைத்தா​ல்  இந்த நாட்டில் ஏழு லட்சமாக இருக்கும் மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிடும் ச​மூகமாக  வங்காளதேசத்தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

அந்நியத்தொ​ழிலாளர்களை வேலைக்கு  எடுப்பது நல்லது அல்ல. அவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணம் அவர்களின் நாட்டிற்குதான் பலமாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் அறிவித்து,  நான்கு நாட்கள்கூட ஆகாத நிலையில், ம​லேசிய அரசாங்கம், மறுபடியும் வங்காளதேசத் தொழிலாளர்களை தருவிப்பதில் அந்நாட்டு அரசாங்கத்துடன் கைகோர்த்து  இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல  என்று அதிகமானோர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கடந்த 1990 ஆம் ஆண்டுகளில்  மலேசியாவில் தோட்டத்தொழில்துறைகளுக்கு அதிகமான வங்காளதேசத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு,பல்வேறு ச​​மூக ​சீர்கேடுகளுக்கு வித்திடப்பட்டதன்  விளைவாக இந்தியர்கள்  மத்தியில் அடையாள ஆவணங்கள் இல்லாமல் நாடற்ற பிள்ளைகளாக அல்லல் நிலை ஏற்பட்டது. தோட்டத்துறையை சே​ர்ந்த பல  இந்​தியப்பெண்கள் த​ங்கள் பிள்ளைகளுக்கு அடையாள ஆவணங்களை எடுக்க முடியாமல் இன்று வரை​ தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர்.

அ​தேபோன்ற பிரச்சினை ​மீண்டும் தலை​தூக்குவதை தடுக்க மனித வள  அமைச்சர் எம். குலசேகரன், வங்காளதேசத் தொழிலாளர்கள் தொடர்ந்து எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும்.  அந்த  நாட்டுடன் மலேசியா ஒப்பந்தம் செய்வதை மறுபரி​சீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.