மதிகவில் அதிகாரம் பெற்றவர் பொன். வாசகமா? அண்ணாமலை வெறும் கூஜாவா? -எப் .காந்தராசு கேள்வி

0
112

மதிக உடன்பிறப்புகளே,

வணக்கம்;

14-7-19 அன்று! பொன்வாசகம் கம்பெனியார் கூட்டியுள்ள கூட்டம் சட்டப்படி சரியானதா? ஏனென்றால் 3-10-2019 மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நாம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது; அந்த வழக்கு விசாரணைக்கு வருகிற காரணத்தால், எடுக்கவேண்டிய தடையுத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம் என்ற நிலைபாடுதான் சரியென்ற முடிவை எடுத்துள்ளேன்.

அதற்குள், அண்ணாமலை- பொன். வாசகம் இருவரும் வெளியிட்டுள்ள இரண்டு துண்டு அறிக்கைகளைப் பார்த்திருப்பீர்கள்!

அண்ணாமலை சொல்லுகிறார் “ தீர்ப்பு தனக்குச் சாதகமாக வருமென்று; “

இது நீதிமன்ற அவமதிப்பாகும், இது குறித்து போலீஸ் புகார் செய்யப்படும்.

ஒரு மேல் முறையீட்டு வழக்கில் மூன்று நீதிபதிகள், அமர்வர்! அந்த மூன்று நீதிபதிகளில் இருவர் ஒரு சேரத்தீர்ப்பு வழங்கினால் வழக்கின் போக்கு மாறும்!

அண்ணாமலை கூற்றுப்படி இரு நீதிபதிகள் அவருக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்குவார்கள் என்று எப்படி முன்கூட்டியே சொல்ல முடியும்?

இது திட்டமிட்ட நீதிமன்ற அவமதிப்புக்குள்ளானது!

அதனால், இது குறித்து இன்னொரு வழக்கு விரைவில் பதிவாகுமென்று தாழ்மையோடுத் தெரிவிக்கிறேன்.

அடுத்து பொன்வாசகம்! ”செயலாளர் என்ற முறையில் தனக்குத்தான் அதிக அதிகாரமுள்ளது, அதனால் கூட்டத்தைக் கூட்டினேன் என்கிறார்.

அண்ணாமலை இதனால் கூஜா என்கிறார்!

இருப்பினும் அந்த மமதையில் வாசகம் செயல்பட்டதால் தான், இன்று நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்கவும் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யவும் வேண்டியுள்ளது.

அதனால், அண்ணாமலை வேண்டுமானால் சாடிக்கேற்ற கூஜாவாவும் இருக்கலாம். என் மனநிலைஅதுவல்ல! நான்சரியாகவே இருக்கிறேன். எனக்கென்று சுயவருமானமுண்டு.

கழகப் பணத்தில் சேவையைத் தொடரவேண்டிய நிலையிலும் இல்லை! எனவே;பட்டால்தான் தெரியும் சிலருக்குச் சுட்டால்தான் புரியும் பலருக்கு!

அதனால், இன்னும் கழகச்சட்ட விதிகள், நீதிமன்ற அமைப்புக்கள் மீதும் எனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாலே—

29-4-2018- லிருந்து எனக்கு எதிராகவும், கழக விதிகளுக்கு முரணாகவும் பொன். வாசகம் சரிகாட் எதிராகச் செய்து வந்துள்ள எந்த நடவடிக்கையும் செல்லுப்படியாகாது, என்பதுதான் வழக்கில் உண்மையான போக்கு!

அதனால், 14-7-19 அன்று கூட்டுகிற கூட்டமும் அந்த அடிப்படையில்தான் அடங்கும் என்பதால், இடையிலே ஏற்படுகின்ற இந்த திடீர் குழப்பத்தில் கழக உடன்பிறப்புகள், பங்கேற்று பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகிற நல்ல நோக்கத்தைத் தவிர எனக்கு வேறு எந்த கெட்ட நோக்கமும் கிடையாது.

அதனால், பெரியாரின் மிக முக்கியமான கருத்தை அனைவரும் கவனத்தில் கொள்வது நல்லது;

“வேலை வெட்டியில்லாதவரை எந்த பொறுப்பிலும் அமர்த்தாதீர்கள், வாழ்க்கையைச் சமாளிக்க வருமானமின்றித் தவிப்பவருக்கும் இயக்கப் பொறுப்பைத் தராதீர்கள், அப்படிதந்தால் அவர் இயக்கப் பணிக்கான, பணத்தை, தனது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளுவர், இயக்கம் அதனால் சிக்கலிலிலும் பிரச்சனையிலும் சிக்கும்!”, என்றார்.

இன்று கழகத்திலுள்ள இன்றையப் பிரச்சனயும் அதுதான்; எனவே, என் நிலையும், கழகம் எதிர்நோக்கியுள்ள உண்மை நிலையும் அறிந்தவர்கள் யாரும் 14-7-19 கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்!

என்றும் அன்புடன்,

எப்.காந்தராசு

12-7-2019

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.