டிசம்பர் 8யில் இரு மாபெரும் பேரணிகள்!

0
61

கோலாலம்பூர்,டிச6- வரும் டிசம்பர் 8 (சனிக்கிழமை) அன்று நாட்டின் தலைநகரில் இரு பேரணிகள் நடைபெறவுள்ளன.வெவ்வேறு நோக்கத்தைக் கொண்ட அந்த இரு பேரணிகளும் மனித உரிமையை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

பெட்டாலிங் ஜெயாவின் பாடாங் தீமோரில் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை அனைத்துலக மனித உரிமை பேரணி சுஹாக்காமின் ஏற்பாட்டில் நடைபெறும். இதில் பிரதமர் துன் மகாதீர் முகமது சிறப்பு பிரமுகராக கலந்துக்கொள்வார்.

மாறாக, பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணி வரை அனைத்து வகையான இனவாதப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு (ஐசிஇஆர்டி) எதிர்ப்பு பேரணியை மெர்டேகா சதுக்கத்தில் மலாய் அரசு சாரா இயக்கங்கள் ஏற்பாடு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here