கல்வியில் பாராபட்சம் வேண்டாமே – டத்தோ டி. முருகையா கோரிக்கை

0
69

கடந்த வாரம் வெளியாகிய யூபிஎஸ்ஆர் தேர்வில் நம் இந்திய மாணவர்கள் மிகச் சிறப்பான தேர்ச்சியினை பெற்று நம் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தனர்.

அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வினை பெற்றோர் மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் செய்து கொண்டிருக்கும் வேளையில் கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் கோலாச்சிலாங்கூர் சைன்ஸ் இடைநிலைப்பள்ளியில் தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளியிலிருந்து போன மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்.

அக்கூற்று உண்மைதான் என்றாலும் அது இக்காலச்சூழலுக்கு புறப்பான ஒன்றாகவே கருதப்படுவதால் இதற்கான மாற்றத்தை ஏற்படுத்த நமது கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கல்வியில் பாராபட்சம் பார்ப்பது சிறுவயதிலேயே அக்குழந்தைகளின் மனதில் ஆழமான வடுவாகிறது. அதுவே இனத்துவேச உணர்வை மேலோங்கச் செய்கிறது என்றாலும் மிகையில்லை.

மூவினமும் சேர்ந்ததுதான் மலேசியா என்பதை வெறும் உதட்டளவில் சொல்லாமல் செயலிலும் காட்டினால் மட்டுமே அதற்கான உணர்வை நாம் முழுமையாக சுவாசிக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் இன்னும் தீர்ப்பு வழங்காத வழக்குகே வரலாறு புத்தகத்தில் இடம் கிடைத்து விட்டது. ஆனால், வரலாற்றுக்கே சொந்தமான நமக்கு இன்னும் முழு தீர்வு கிடைக்கவில்லை என்றும் தனது வருத்தத்தைக் கூறினார் டத்தோ டி. முருகையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here