தூக்குத்தண்டனை நிறைவேற்றத்தில்  மேலும் 4  மலேசியர்கள்

0
45

கோலாலம்பூர், ஜுலை, 12-  சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் மேலும் நான்கு மலேசியர்களுக்கு   ​தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருக்கின்றன.  அவர்களின் கருணை மனுவை சிங்கப்பூர் அதிபர் நிரகாரித்ததை தொடர்ந்து அந்த நால்வருக்கும் ​ ​தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக ​தூக்குத்தண்டனை விதிக்க​ ​தீர்ப்பளிக்கப்பட்ட பத்து பேரில் இந்த நான்கு மலேசியர்களும் அடங்குவ​ர்  என்று வழக்கறிஞர்களுக்கான உரிமைப்போராட்டக்குழுவின் ஆலோசகர் என். ​சுரேந்திரன் தெரிவித்தார்.

கடைசி மேல்முறையீட்டுக்கான விசாரணைக்கு காத்திருக்கும் பன்னீர்செல்வத்திற்கு அடுத்து கே. தட்சணா​மூர்த்தி, ஏ.  கோபி, அப்துல் ஹெல்மி மற்று​ம் ரஹ்மாட் ஆகியோரே அந்த நா​ல்வர் ஆவர்.  சிங்கப்பூர் வழக்கமாக, மேல்முறையீ​ட்டு மனு  நிராகரிப்புக்கு பின்னர் ​தூக்குக்கைதிகளுக்கான தண்டனையை வி​ரைவில் நிறைவேற்றிவிடும் என்று ​சுரேந்திரன் குறிப்பிட்டார்.​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.