காவல்துறையைப் போல் மாறுவேடமிட்ட கொள்ளைக்கும்பல் கைது

0
55

கோலாலம்பூர்,அக் 11- கடந்த 2 மாதங்களாக போலீசாரைப்போல் மாறுவேடமிட்டு கொள்ளைச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த “கெங் ஆடி” என்றழைக்கப்படும் எட்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சேர்ந்த குற்றவாளிகள் குழு ஒன்று, செராஸ் மற்றும் செலயாங் என வெவ்வேறு இடங்களில் கடந்த 2 அக்டோபர் அன்று பிடிப்பட்டது.

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் இந்த குழுவின் நடவடிக்கை, ஜாலான் துரைசாமியில் அக்குழுவின் உறப்பினரான ஒருவனை கைது செய்தப்பின்னர் தெரியவந்தது என்று டாங் வாங்கி  மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சி.பி. ஷாஹாருடின் அப்துல்லா தெரிவித்தார்

18 மற்றும் 26 வயதிற்கு உட்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்த பொது, பல வகையான கைத்தொலைபேசிகள், கடன் அட்டைகள் மற்றும் அக்கொள்ளைச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட பெர்டுவா அல்ஸா ரக வாடகை வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என்று ஷாஹாருடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here