மறைந்த தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரம் பேர் கூடினர்!

0
67

அலோர் ஸ்டார்: மறைந்த தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் உடல் இன்று காலை 10.29 மணியளவில் கோலா கெடா, தெபாங்காவ் தேசிய பள்ளியின் திடலுக்கு ஒரு ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

பள்ளிக்கு உள்ளும் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க காலை 8 மணியிலிருந்து காத்திருந்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சவவூர்தியில் அடிப்பின் உடல் அவரின் பெற்றோரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கூடவே, தீயணைப்பு, மீட்புத் துறை பணியாளர்கள் 200 பேர் சீருடையில் ஊர்வலமாக சென்றனர்.

அடிப் நல்லுடல் அவரது வீட்டுக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள மஸ்ஜித் அஸ்-ஸாஆடா முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here