சிங்கப்பூரில் மலேசிய குடிமகனுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!

0
117

பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்த முயன்ற  குற்றதிற்காக பிரபு பத்மநாதன், சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலடப்பட்டார், என்று  வழக்கறிஞர் என் சுரேந்திரன் கூறினார்.

இந்த தீர்ப்பு கடுமையான மற்றும் சட்டவிரோதமான செயலாகும், இது செயல்முறையை மீறியா மற்றும் மலேசியாவின் முறையீட்டிற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

“இந்த தண்டனையை நிறுத்த மலேசியாவின் அமைச்சர்கள் நேரடியாக சிங்கப்பூர் தலைவர்களுடன் கலந்துரையாடியும், அது பயனளிக்கவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்,” என்று லவ்யர்ஸ் போர்  லிபர்டிகான ஆலோசகரான அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் அதிபர், ஒரு குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை கருத்தில் கொள்ளாமல் நிராகரிகத்தது ஒரு குற்றமாகும்.”எனவே, அது ஒரு மனிதாபிமானமற்ற செயல்”, என்று அவர் கூறினார்.

31 வயதான பிரபு, கடந்த 31  டிசம்பர்  2014யில்  நாட்டிற்குள் டியாமொர்பின் அல்லது ஹெராயின் வகையிலான 227.82g  போதைமருந்தை கடத்த முயற்சி செய்த குற்றதிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.