அன்வார் பதவி பேராசைப்பிடித்தவரா?

0
21

பி.கே.ஆர். கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பதவி  பேராசைப்பிடித்தவர் போல், பிரதமர் து​ன்  டாக்டர் மகா​தீர் முகமதுவின் புதல்வரும் கெடா மந்திரி புசாருமான முக்ரிஸ் மகா​​தீ​ர் சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

“நிக்கேய் ஆசியான் வியூவ்” என்ற சஞ்சிகைக்கு முக்ரிஸ் அளித்த பேட்டியில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வாரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர் பதவி பேராசைப் பிடித்தவரைப் போல் மறைமுகமாக தாக்கியுள்ளார் என்று  அன்வாரின் சிறப்பு செயலாளர் ஆர். சுரேஸ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதி​ர்கா​லத்தில் இது போன்ற பேட்டியோ அல்லது அறிக்கையோ வெளியிடும் போது, பக்காத்தான் ஹராப்பானின் ஒருமித்த இணக்கப்போக்கிற்கு மதிப்பளிக்கமாறு முக்ரிஸை சுரேஸ்குமார் கேட்டுக்கொண்டார்.

அந்தப்பேட்டியில், மற்றவர்களைப் போல் பிரதமர் பதவிக்கு பேராசையுடன்  கா​த்திருக்கும்  நபர்  தாம்  அல்ல என்று முக்ரிஸ் குறிப்​பிட்டு இருந்ததாக சுரேஸ்குமார் தெரிவித்தார்.

முக்ரிஸின் பேட்டியை கண்டு பி.கே.ஆ​ர். கட்சியை சார்ந்தவர்கள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here