அன்வாரை ஓரங்கட்ட மகாதீரின் ஆளானாரா அஸ்மின்?

0
70

விரைவுச்செய்தி!

கெஅடிலான் கட்சித்தேர்தலில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் அணி முற்றாகத் தோற்கடிக்கப்படுமேயானால்,அலியின் பாதை முற்றாக துன் மகாதீரை நோக்கியே பயணமிக்கும், மகாதீரின் பெர்பூமி கட்சியின் பக்கம் அவர் திரும்புவார்.அப்படி அவர் திரும்பும் போது; தனக்கான ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தம்மோடு அழைத்துச்செல்லக்கூடும் என்றே தெரிகிறது. அந்த எண்ணிக்கை 10 லிருந்து 15 வரை அதிகரிக்கலாம் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, தமக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை தனது எதிரிக்கு இரண்டு கண்ணாவது போகவேண்டுமென்ற எண்ணமுடைய மகாதீன் இந்த திட்டத்தில், அடிலானை விட்டுவெளியேறுகிற நாடாளுமன்ற உறுப்பினர்களை சரிக்கட்டும் விதமாக அவர்களுக்கு அரசுத்துறை வாரியங்களிலும்,இன்னப்பிறத் தொழில் நிறுவனங்களிலும் பதவிகளை வழங்கி அதிக வருமானத்திற் குரிய திட்டமொன்றை மகாதீர் கட்டமைப்பார் என்றே தெரிகிறது.

இதன் மூலம் அடிலானை உடைத்தமாதரியும், அதேவேளை தமது பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொண்ட மாதரியும் இருக்கும்,என்பதே மகாதீன் திட்டமாகும்! இந்த நிலை அழுத்தம் பெறுமேயானால் டத்தோஸ்ரீ அன்வாரின் பிரதமர் கனவை சிதைக்க முடிமென்று மகாதீர் நினைக்கிறார்.

13 நடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே தம் வசம் வைத்துள்ள பெர்பூமியின் பிரதிநிதியான மகாதீர்,பிரதமராகும் போது; 47 நாடாளுமன்ற உறுப்பிர்களை கைவசம் வைத்துள்ள அடிலானின் பிரதிநிதியான அன்வார் இரண்டாண்டு்வரையென்ன, இவ்வாண்டு இறுதிவரைக்கூட காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே அன்வாரின் ஆதரவுக்களம் தெரிவிக்கிறது.

எனவே எப்படிப்பார்த்தாலும் அஸ்மின் துணைத்தலைவர் தேர்தலி்ல் தோற்கடிக்கப்படுவது உறுதியென்பதை மகாதீருக்கு முன் கூட்டியே திட்டவட்டமாகத்தெரிந்து வைத்துக்கொண்டுதான்,அவருக்கு பொருளாதார அமைச்சர் பதிவியொன்றை உருவாக்கி,தமக்கு பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டதோடு மட்டுமல்ல,அதே அஸ்மினை முன்வைத்தே அன்வாருக்கு குடைச்சல் கொடு்க்கும் வேலையிலும் மகாதீ்ர் தீவிரமாக இறங்கியுமுள்ளா்.

எனவே அடிலானின் தேர்தல் காலம் நவம்பர் மாதம்வரைதான், அதன்பின்னர் இந்த
மூடுமந்திரமெல்லாம் தாக்குப்பிடிக்குமா? அல்லது பாரிசான் கதவை இந்த அணியில் ஏதாவதொரு அணி தட்டவேண்டி வரலாம்; அதன்பின் மலேசிய அரசியலும்,ஆட்சியும்
தலைக்கீழாகத் திரும்புமென்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

களத்திலிருந்து
உங்கள்- சாணக்கியன்
14/9/18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here