தஞ்சோங் மாலிம் கே தி எம் (KTM) நிலையமருகே ரயில் விபத்து

0
124

ஈப்போ, அக் 18- இன்று காலை 6 மணியளவில் தஞ்சோங் மாலிம் கே தி எம் நிலையமருகே, கே தி எம் கம்யூட்டர் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானதில் வடக்குப் பகுதிகளுக்கு செல்லும் ஈ தி எஸ்(ETS) சேவைகளில் சிறிது கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் மனிதப் பிழை ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த விபத்து விசாரணை செய்யப்படும் என்று கே தி எம் பி  தலைமை நிர்வாக அதிகாரி ராணி ஹாசிம் சம்சுடின் கூறினார்.

மேலும் தஞ்சோங் மாலிம்- கேப்போங் செல்லும் கே தி எம் கம்யூட்டர் சேவையும் பாதிக்கப்படுள்ளது.இவ்விபத்தில் எந்தவொரு உயிருடற்சேதங்களும் ஏற்படவில்லை.

மேலும் விவரங்களை பெற 03-22671200 எனும் எண்ணின் மூலம் கே தி எம் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.