ஆண்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாக காரணம்

0
270

சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி நம்மால் தாங்க முடியாது. அந்த அளவிற்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஆனால், சிறுநீரக கற்களால் பெரும் பிரச்சினை இல்லை. அதனை சரிசெய்ய நவீன சிகிச்சைகள் உண்டு. சிறுநீரக கற்கள் உருவாகும் காரணம் குறித்தும், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பார்க்கலாம்.

வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளது. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே ரத்தத்தை சுத்திகரிப்பது தான். பொதுவாக 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ரத்தத்தில் ஆக்சலேட் உப்பு அதிகமாக காணப்படும். இந்த வயதினருக்கு டெஸ்டோஸ்பீரான் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு சிறுநீரகங்களில கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் குடிக்கின்ற தண்ணீரின் அளவு போதுமானதா? இல்லையா? என்பதை சிறுநீரின் நிறத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம். எனவே, தண்ணீர் நிறத்தில் சிறுநீர் போகும் அளவுக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக கடுமையான வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். சில சமயங்களில் ரத்தம் கலந்து வரலாம். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா? என்பதை ஸ்கேன் பரிசோதனை மூலமாகவும், எக்ஸ்ரே மூலமாகவும் உறுதிபடுத்தலாம். பொதுவாக சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மி.கிராம் இருக்க வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும். எனவே, சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.

பொதுவாக 90 சதவீத கற்கள் சிறுநீர் வழியாக தானாகவே வெளியேறிவிடும். 6 மில்லி மீட்டர் தடிமனுக்கு அதிகமான பெரிய கற்கள் தான்வெளியேறாது. அத்தகைய கற்களை அதிர்வலை மூலமாக சிறு, சிறு துகள்களாக உடைத்து வெளியேற்றிவிடலாம். இதில் வெளியேறாவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை என்ற நிலைக்கு போக வேண்டும்.

சிறுநீரக கற்களுக்கு உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் சிறுநீரகம் இயங்க முடியாமல் போய்விடும். அல்லது சிறுநீரகத்தில் சீழ்பிடித்து, அறுவை சிகிச்சைமூலம் அகற்ற வேண்டியதாகி விடும். MM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.