கோவிலுக்குள் செல்ல அன்வாருக்கு தடை இல்லை

0
7

கோயிலுக்குள் நுழைய பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தடை செய்ததாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியை மறுப்பதாக பண்டார் சுங்காளா, போர்ட்டிக்சனில் அமைந்திருக்கும் ஸ்ரீமஹா மாரியம்மன் கோவிலின் நிர்வாகக்குழு கூறியது. அன்வார் இப்ராஹிமின் சிறப்பு உதவியாளரான ஆர்.சுரேஷ் குமாருடன் நேற்று சந்திப்பு நடத்தியப் பின்னர் நிருபர்களிடம் கோவில் நிர்வாகி பாலகிருஷ்ணன் அவ்வாறுக் கூறினான்.

அன்வார் வருகையின் பொது சிறு சலசலப்பு இருந்ததாகவும் அதற்கும் அன்வாருக்கும் தொடர்பில்லை என்று அவர் கூறினான்

இதற்கிடையில், கோவிலில் நிலப் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பியே அன்வார் கோவிலுக்குச் சென்றதாக சுரேஷ் கூறினார்.

இடைத்தேர்தலுக்கு பின்னர் அன்வாருடன் ஒரு சந்திப்பு நடத்த கோவில் நிர்வாகக்குழு விரும்புவதாகவும் சுரேஷ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here