இன்றே பணியைத்தொடங்குவோம்!

0
76

தோழர்களே வாழ்க- வளர்க! இன்றே பணியைத்தொடங்குவோம்!

நமது, ஆகஸ்ட்-31- இயக்கத்தில் இதுவரைக்கும் பதிவிட்டுள்ள அத்தனைப்பேரும் அவரவர் வாழும் இடங்களின் பெயரை குறிப்பிட்டு – நமது- 31-லோகோவை முன் பதிவிட்டு, வாட்சாப்பில் புதுக்கணக்கை உடனடியாகப் பதிவிடுங்கள். அப்படிச் செய்துக்கொண்டால், அதையொரு ,*கிளை * எண்ணிக்கையில் பதிவிட முடியும்!

அப்படி பதிவிட்டவர்களின் பெயர், அலைபேசி எண்களை முறைப்படுத்தி தலைமையகத்திற்கு அனுப்பி வைத்தால் வாக்காளர்களின் முழுமையான எண்ணிக்கை அதிலி்ருந்து நேர்படுத்த முடியும்!

காலவோட்டத்தில்;  அந்த இணைப்பில் ஒருமுகப்படுத்தப்பட்டவர்கள் வாக்காளர்களாக இணக்கப்படுவார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர் வாட்சாப்பில் குறைந்தது 200 பேரை பதிவிட்டால்; அது 10 ஆயிரமானால்; 2 லட்சமாகலாம், அது 20 ஆயிரமானால்; 4 லட்சமாகலாம்! அது 30 ஆயிரமானால்; 6 லட்சமாகலாம்! அது 40 ஆயிரமானால் 8 லட்சமாகலாம்!

அது, 50 ஆயிரமானால் 10 லட்சமாகலாம்!

இப்படி! நமது இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை உயரும் போது; அது ஒட்டு மொத்த சமூகத்தின் வாக்குரிமை பலமாக மாறும்! உருவெடுக்கும்!

இந்த வாக்கு வலிமையானது; எந்த வகையிலும் அரசியல்கட்சிகளின் கையில் சிக்கிவிடக் கூடாது!

அவர்கள் மாற்றி- மாற்றி- இதுவரை ஒவ்வொரு கூட்டணியும் ஆட்சிக்கு வர கூண்டோடு அடகுவைத்து; அவர்கள் பதவிகளிலும், தக்க வருமானத்திலும் தங்களை இணைத்துக்கொள்ளுவார்கள்!

ஆனால்; இவர்கள் சொன்னதை நம்பி வாக்களித்த நாம் இன்னும் அடிப்படையான உரிமைகளுக்குப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்!

இதே நிலைபாட்டைத்தான் கடந்த- 62- ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம்!

அதனால், இந்த வாக்கு வலிமையை வருகின்ற 15- வது தேர்தலிலாவது நமக்கான உரிமையை மீட்டெடுக்கும் ஒரு ஆயுதமாகப் படுத்த ஆட்சியில் இருக்கிற கூட்டணியோ? அல்லது மாற்றம் பெற்றுவரும் எந்த கூட்டணியோ! அது எதுவாகயிருந்தாலும் நடப்புக்கு, அமலுக்கு திட்டமாக, சட்டமாக ஏற்பதற்குத் தாயாராகி, அதற்கான ஒப்புதல் கையொப்பமாகும் போது, அன்றைய நிலைமக்குக் கட்டுப்படுகிற எந்த கூட்டணி சரியென்று நமது இயக்கம் முடிவு செய்கிறதோ! அதையொட்டி நமக்கான வாக்குரிமை அன்றைய தேர்தல் அரசியலைத் தீர்மானிக்க முடிவெடுப்போம்!

இதையொட்டி நிறைய களப்பணிகள் நமக்கு இருப்பதால் முதல் கட்டமாக மேற் கண்ட பணிகளில் நிறைவுறுவோம்! தக்க இலக்கை நோக்கிப்பயணிப்போம்!

வாரீர் ஆதரவைத் தாரீர்!

என்றும் அன்புடனே,

பெரு.அ.தமிழ்மணி

19-9-2019

Unit 03-02-E, Tingkat 3, No.470, Batu 3, Jalan Sultan Azlan Shah, 51200 Kuala Lumpur. Contact: 03-40506552, 03-40501552, 011-10622159, 016-4092624, 017-4661767

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.