மகாதீர் திருந்தினால் நல்லது, திருந்தாவிட்டால் பேராபத்து?

0
180

துன் மகாதீர் மக்கள் கூட்டணி ஆட்சியில் மீண்டும் மலாய்க்காரர்களின் பொருளாதார அடைவு நிலைக் குறித்து மிகவும் கவலைப்பட்டுள்ளார். காரணம்

இன்னும் அவர் அவராகவே இருப்பதால் அது; நியாயமான கவலைத்தான்.

முன்பு; அம்னோவால் கட்டமைக்கப்பட்ட பாரிசான் ஆட்சியில் இதேபோன்ற கவலையான நிலைபாட்டிற்கு வந்த அவர் ;அரசின் முழுக்கட்டுப்பட்டிலிருந்த பிரிவுகளையெல்லாம் குறிப்பாக ,டெலிக்கோம் மலேசியாவாகவும், தெனகா நேசனலாகவும், இரயில்வே பெர்ஹாட்டாகவும்,இண்டா ஓட்டராகவும், போஸ்ட் மலேசியாவும்,அலாம் புளோரவாகவும் மாற்றி அமைக்கப்பட்டன.

அப்படி மாற்றி அமைக்கப்பட்டபோது, 51 சதவீத பங்குகளை அரசாங்கம், வைத்துக்கொண்டு, எஞ்சிய 49 சதவீத பங்குகளை மலாய்க்காரர்களுக்கு வழங்கப்பட்டது.

அப்படி வழங்கப்பட்டதாலே தேசியப் பொருளாதார வளர்ச்சியில் பூமிபுத்ராக்களின் பங்குரிமையும் பொருளாதார இலக்கும் அதிகரிக்க முடியும் என்ற திட்டமிடலாகும்.

அப்படி வழங்கப்பட்ட அந்த பங்குகளுக்கு நிதியுதவியும், குறைந்த பட்ச வட்டி விதிமுறையும் நிர்ணிக்கப்பட்டது. அதாவது நாட்டின் வளர்ச்சியில்

மலாய் இனத்தின் பொருளாதார விழுக்காட்டை மேம்படுத்த முதல்கட்டமாக எடுத்துவைத்த அந்த முயற்சியில் மலாக்காரர்கள் வெற்றி பெற முடிந்த்தா என்பதை இன்றைக்கு மீண்டும் பிரதமாராகியிருக்கும் மகாதீர் ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அரசாங்கச் சொத்துகளாயிருந்தவைகளில் 49 சதவீத பங்குகளில் எத்தனை சதவீத பங்குகளை  மலாய்க்காரர்கள் இன்று தங்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள். அந்த பங்குகள் எப்படியெல்லாம் அடுத்தவர்களின் கைக்கு மாறியிருக்கிறது என்பதோடு- சாமானிய மக்களிடமிருந்த அந்த பங்குகள் எப்படியெல்லாம் பணமுலைகளிடம் உருமாறி சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இன்றைக்கு  மீண்டும் பிரதமராகியிருக்கும் மகாதீர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேநிலைப்பாட்டில் மீண்டும் சாமானிய நிலையிலுள்ள மலாய் மக்களை எண்ணிப்பார்ப்பது தவறில்லையென்றாலும். அவர்களெல்லாம் கூடுமானவரை, அரசு ஊழியர்களாகவும், பெருமளவு தனியார் நிறுவனங்களிலும் பூமிபுத்ராவுக்கான கோட்டா அடிப்படையில் பணியில் இருக்கவே செய்கிறார்கள்.

அதேவேளை இத்தகைய  இடைவெளிக்கிடையே முற்றிலுமாக அரசுத்துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலைக்கு மனுப்போட்டு, விண்ணப்பித்து பல ஆண்டுகள் காத்திருந்து இன்னும் எந்த வேலையுமின்றி பல இன்னலுக்கும் சங்கடங்களுக்கும் இலக்காகி அன்றாட வாழ்க்கையைச் சுமையாக்கிக்கொண்டிருக்கிற ஏழை இந்திய சமுதாயத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும், தொடக்கத்தில் ஒரு தோட்டப்புற சமுதாயமாக உருவெடுத்த இந்தியர்கள் , பின்னர் அவர்களின் குழந்தைகள் படித்தும் அரசாங்க வேலைகளைப்பெற முடியாத அளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது துன் மகாதீர் ஆட்சியில்தான்,

அதாவது இவரின் 22 ஆண்டுக்கால ஆட்சியில் அரசுத்துறை வேலைகளுக்கான விண்ணப்பங்களில் ஏகப்பட்ட பாரபட்சமும் பாரமுகமும் காட்டப்பட்டு வந்ததிலிருந்து; அதன் பின் அவரைப் பின்பற்றி வந்த  மற்ற ஆட்சியாளர்களாலும் அதுவே  நடைமுறையாகக்கப்பட்டது. அதனாலே இன்று வரை, பெருமளவு அரசுத்துறையில் இந்தியர்கள் இருந்த இடந்தெரியாமல் போய்விட்டனர்.

எனவே மீண்டும் மகாதீர் மலாய்க்காரர்களின் பொருளாதார முன்னேற்றம்

குறித்து சிந்திக்கும் அதேநேரத்தில் ;ம இ கா தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் ஆழமான பரிந்துரையின் மூலமாக ,முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிடம் முன் வைத்த இந்தியர்களுக்கான புதிய புளுப்பிரிண்ட் வரைவுத்திட்டம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும், அந்த திட்டத்தில் ஏதாவது பலவீனமிருக்குமேயானால், அதைச் சரிபடுத்தியும், மேலும் அதை மேம்படுத்துவதற்கான வழிமுறையிருந்தால் அதை மேம்படுத்தியும்  இந்தியர்களை வளர்ச்சிப்பாதையில் திருப்பிவிட மகாதீர் திட்டமிட வேண்டும்.காரணம்  இந்தியர்களின் பொருளாதார விழுக்காடு இன்னும் ஒரு சதவீத்தைக்கூட எட்டாமலேயே இருந்து வருக்கிறது.

எனவே,,சீனர்களின் நிலைபாட்டில் மலாய்க்காரர்கள் இல்லையென்றாலும், இந்த இரண்டு இனங்களுக்கிடையிலேதான்  இந்தியர்கள் இன்னும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை மகாதீர் உணரவேண்டிய

நேரம் வந்துவிட்டது. எனவே ,நாட்டுக்கு நல்லலென்பதாலே,இந்த கோரிக்கையை மக்களின் கருத்தாக திசைகள்,முன் மொழிகிறது.

களத்திலிருந்து- உங்கள் சாணக்கியன்.

27/6/18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here