மலாய்காரர்களின் சுனாமி ஒரு மாயை, சீனர்கள் அதைக் கண்டு குழப்பம் கொள்ள வேண்டாம் –நஜிப்

0
198

கோலாலம்பூர்: கெரக்கான் உறுப்பினர்களிடையே இன்று உரை நிகழ்த்திய பிரதமர் டத்தோ சிறீ நஜிப் துன் ரசாக் அவர்கள் எதிர்க் கட்சிகளின் பொய் பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர்களின் தீய எண்ணம் பலிக்காது என்றும் கூறினார்.

அவர்கள் கூறுவது போல் இதுவரை எந்த மலாய்காரர்களின் சுனாமியையும் அவர் காணவில்லை என்றும், மலாய் மக்கள் பாரிசான் அரசின் மேல் வெறுப்பாக இருப்பதாகவும் அதனால் அவர்கள் எதிர்கட்சிகளுக்கு வாக்களிப்பர் என்பதும் முழு பொய் என்று அவர் தெரிவித்தார்.

பாரிசான் அரசு எப்பொழுதும் சீன மக்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பதாகவும், சீன மக்களின் நல்வாழ்விற்காக பல நல்லத் திட்டங்களை அவை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மசீசா மற்றும் கெரக்கான் ஆகிய கட்சிகளின் சீரிய முயற்சியால் சீன மக்களின் கோரிக்கைகளும் அவர்களின் நலனும் எப்பொழுதும் காக்கபடுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் சீனர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் அவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாரிசான் அரசால் காப்பாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனால், சீன மக்கள் அவர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பை பாரிசானுக்கு வழங்கவேண்டும் என்றும், அவர்களின் வாக்குகளை பாரிசானுக்கு அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறினார். –பிரியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here