ஆசிய விளையாட்டுப் போட்டி: 7 தங்கங்களுக்கு மலேசியா இலக்கு- சைட் சடிக்

0
25

புத்ராஜெயா,ஆகஸ்ட்.10- இவ்வாண்டு ஜகார்த்தா பலேம்பாங்கில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஏழு தங்கப் பதக்கங்களை வெல்ல மலேசியா இலக்கு கொண்டுள்ளதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் தெரிவித்தார்.

சென்ற முறை அதாவது 2014-ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா ஐந்து தங்கங்களைப் பெற்றது.

ஆக , இம்முறை ஏழு தங்கங்களுக்கு மலேசியா குறி வைத்துள்ளதாகவும், ஆனால், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், 11 தங்கங்களை கூட வெற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக சைட் சடிக் குறிப்பிட்டார்.

2018-ஆம் ஆண்டி ஆசிய விளையாட்டுப் போட்டி இம்மாதனம் 18-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here