மலேசிய பிரிமியர் லீக்கில் மிஃபா  3-ம் இடத்தை பிடித்தது!   சமுதாயத்தினர்கள் மகிழ்ச்சி

0
237

இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து மலேசிய பிரிமியர் லீக்கில் களம் கண்ட மிஃபா அணி திறம்பட செயல்பட்டு 32 புள்ளிகளோடு 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. அதே வேளையில் மலேசியக் கிண்ணப் போட்டிகளுக்கும் தகுதி பெற்று சரித்திரம் படைத்துள்ளதை எண்ணி சமுதாயப் பெருமக்கள் மட்டற்ற  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மிஃபா அணி தனது கடைசி ஆட்டத்தில் திரெங்கானு அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் நமது அணி  வெற்றியை பதிவு செய்தது.

நமது அணி 20 ஆட்டங்களை நிறைவு செய்து 9 ஆட்டங்களில் வெற்றியும், 5 ஆட்டங்களில் சமநிலையும், 6 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு 32 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த வெற்றி குறித்து மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில் பொருளாதார நெருக்கடிகளை தாண்டி நமது அணி பிரிமியர் லீக்கில் 3 ம் இடத்தை பிடித்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றார்.மேலும் மலேசிய கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றமை மிகப்பெரிய சாதனை என அவர் வர்ணித்தார்.  மேலும் நமது அணியின் வளர்ச்சிக்கு துணைநின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

அணியின் மேலாளர் துவான் ஏ.எஸ்.பி ராஜன் அவர்கள் கூறுகையில் சமுதாய காற்பந்துத்துறையில் ஒரு சரித்திரத்தை நமது அணி நிலைநாட்டியுள்ளது. நாம் இந்த சரித்திரத்தை எண்ணி பெருமை கொள்ள வேண்டுமென்றாநமது அணி நமது வெற்றி நமது கடமைர் அவர்.

அணியின் தலைமைப் பயிற்றுநர் தேவன் கூறுகையில் மலேசியக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறுவது நமது இலக்காக இருந்தது. அதனை நோக்கி பயணித்தோம் வெற்றியும் கண்டுள்ளோம் என அவர் பெருமையோடு குறிப்பிட்டார்.

நமது அணி நமது வெற்றி நமது கடமை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here