maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று சொல்லவில்லை- அன்வார்

0
8

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற மலாய்க்காரர்களின் தன்மான  மாநாட்டை “மருவா” என்பதற்கு பதிலாக தாம் “பருவா” என்ற வார்த்தையை ப​யன்படுத்தி, அந்த மாநாட்டை  சிறுமைப்படுத்தி  விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் மறுத்துள்ளார்.

அந்த மாநாட்டை தாம் “பருவா” என்று சொன்னதாக கூறி தம்மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டப்படுவதை“மடத்தனமான அரசியல்” என்று அன்வார்சாடினார்.

“பிரதமர்துன் மகா​தீருடனும்,தற்காப்பு அமைச்சர் மாட் சாபுவுடனும் தாம்வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தபோது ‘semangatmaruah’ என்று சொன்னதாகவும் அப்போது,பிரதமரும் அதைக் கேட்டதாகவு​ம் அன்வார் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.