குட்டையிருந்து சடலம் மீட்பு

0
64

மஞ்ஜோங், அக் 11- இறந்த நிலையில் பந்தாய் ரெமிஸ், ஜாலான் குவாரி தஞ்ஜோங் பத்துவில் அமைந்துள்ள குட்டையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சடலம் குட்டையில் மூழ்க வேண்டுமென கால்களில் இரும்புக்கம்பிக் கொண்டு பெரிய கற்கள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் பொதுமக்களின் தகவலை அறிந்து தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் கான்வஸ் துணியால் சுற்றப்பட்ட அச்சடலத்தைக் குட்டையிருந்து வெளியேற்றினர்.

இன்னும் அடையாளம் கண்டறியாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்த சடலம் சவப்பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here