*அக்டோபர் 3-ல் மதிகவின் மேல் முறையீட்டு வழக்கு!அண்ணாமலைத் தரப்பு எதிர் கொள்ளுமா?

0
112

*அக்டோபர் 3-ல்  மேல் முறையீட்டு வழக்கு!

அண்ணாமலைத் தரப்பு எதிர் கொள்ளுமா?

*ஞாயிறன்று மதிக கூட்டத்திற்கு

காந்தராசு தடையுத்தரவு பெறுவாரா?

கோலாலம்பூர்-ஜூலை-11-

மலேசியத் திராவிடர் கழகத்தின் மேல்முறையீட்டு வழக்கு எதிர்வரும் அக்டோபர் 3- ஆம் தேதி விசாரணைக்கு வருவதால்,அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு என்னவென்று அறிவதற்குள் வரும்-14-7-2019- அன்று செராஸ் பிஜிஆர் எம் மின் கூட்டியுள்ள கூட்டம்; சட்டப்படி செல்லுப்படியாகுமா? என்ற கேள்வி கழக வட்டாரத்தில் தற்போது எழுப்பட்டு வருகிறது.

நடப்புத் தலைவரான் திரு. எப். காந்தராசுவை முன்வைத்து; 29-4-2018- ல்- அவர் தலைமையில் மத்தியச் செயலவைக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதுவும்  அப்படியொரு கூட்டம்; அவருக்கே தெரியாமல்  நடை பெற்றதாகவும் , அந்த கூட்டத்தில் , திரு, அண்ணாமலை- பொன். வாசகம் தரப்பு ,திரு. காந்தராசுவை  தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்ததையொட்டியும், அதே வேளை கொல்லைப்புற வழியாக  ,அண்ணாமலை தலைவராகியதை யொட்டி   தொடுக்கப்பட்டுள்ள பூர்வாங்க வழக்கானது; கடந்த மே-மாதம் தோல்வியில் முடியுற்றதையடுத்து, திரு. காந்தராசு,செய்துள்ள-மேல்முறையீட்டு,  வழக்கு – எதிர்வரும்-10- ஆம் மாதம்- 3- ஆம் தேதி மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது,

இதற்கிடையே, எதிர் வரும் ஞாயிறன்று அவசரகதியில் திரு. அண்ணாமலைத் தரப்பு, கூட்டியுள்ள கூட்டம் சட்டப்படிச் செல்லுப்படியாகுமா? அதேவேளை  அந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள் சட்டப்படியான பேராளர் களாகப் பங்கேற்க முடியுமா?

அப்படியே கூட்டம் நடந்து ; அக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப் படும் பொறுப்பாளர்கள் அனைவரும் சட்டப்படியானவர்களா? என்ற கேள்விக்களுக்கெல்லாம் விடை கூற வேண்டியுள்ளது.

அதனால், அக்டோபரில் நடைபெறவிருக்கிற  வழக்குதான் மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கப்போகிறதென்று; தற்போது கழக வட்டத்தில் பரவலாகப்பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், அக்டோபரில் வழக்கின் முடிவு என்னவென்று தெரிவதற்குள் அண்ணாமலைத் தரப்பு, இவ்வளவு அவசரமாக பேராளர் மாநாடு என்ற போர்வையில் ஒரு கூட்டத்தைக் கூட்டவேண்டியது அவசியந்தானா? என்ற கேள்வியும் கிளைத் தலைவர்களிடையே  எழவே செய்கிறது.

அதேவேளை ஞாயிறன்று நடைபெறும் கூட்டத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவை காந்தராசு பெறக்கூடிய சாத்தியமும் இருக்கிறதென்றும் பேசப்படுவதால்,  வெளியூரிலிருந்து கலந்துக்கொள்பவர்கள் அது குறித்து யோசிப்பதாகவும் , அண்ணாமலைத் தரப்பு அதனால், பதட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது .

ஏற்கனவே பதிவு இலாகாவின் “பாஸ்வோட்” குறியீட்டைச் செயலாளர் என்ற முறையில் தலைவர் காந்தராசுக்குத் தெரியாமலேயே ; பொன்வாசகம் பயன்படுத்தி,காந்தராசுவை கொல்லைப்புற வழியாக வெளியேற்றியதை யொட்டிதான் இந்த வழக்குப் பதிவானது.அதனால் இந்த வழக்கு  அண்ணாமலை, பொன், வாசகம்,சா. பாரதி மூவருக்கும் எதிராகவே காந்தராசு  தொடுத் துள்ளார்,  இந்த வழக்கு குறித்து;

மூத்த திராவிடர் கழகத்தோழர்கள் சிலர் விவரிக்கும் போது; வழக்கு விவகாரமெல்லாம் திராவிடர் கழகத்திற்கு புதிதல்ல, கடந்த 50- ஆண்டுகளாகப் பணிகள் நடக்கின்றனவோ இல்லையோ, வழக்குகள் மட்டும் நடக்கின்றன, அதாவது;திருவாளர்கள் ப. மணியரசு, கே, ஆர், இராமசாமி,ரெ.சு,முத்தையா, பி.எஸ். மணியம் காலம் முதல்;  இன்று காந்தராசு காலம் வரை,வழக்குகள்   தொடரவே செய்கின்றன என்று கவலையோடு  குறிப்பிடுகின்றனர்.

11-7-19

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.