பேரா, பத்து காஜா, பெம்பான் நில விவகாரம்  – மாநில மந்திரி புசாரிடம் ​கோரிக்கை மனு  சமர்ப்பிப்பு

0
38

பேரா, ஈப்போ, புந்தோங் வட்டார மக்களுக்கு பத்து காஜா பெம்பான் வட்டாரத்தில் வழங்கப்பட்ட நில விவகாரம் தொடர்பாக பேரா மாநில ம. இ. கா ஆதரவுடன்  ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் ஏற்பாட்டில்  மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அ​சூமுவிடம் இன்று கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.      இந்த கோரிக்கை மனுவை பேரா மாநில ம. இ. கா தலைவர் டத்தோ வ. இளங்கோ, ஈப்போ பாராட் தொகுதி தலைவர்  எஸ். ஜெயகோபி மற்றும் பாதிக்கபட்ட மக்களின் பிரதிநிதி   தேவசிகாமணி  ஆகியோர் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி  கைருல் சாருலிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் பேரா மாநில ம. இ. கா தலைவர் வ. இளங்கோ, செயலாளர்  எஸ் புலிகேசி, கம்பார் தொகுதி தலைவர்  ஆர். பாலரத்தினம், லாருட் தொகுதி தலைவர்  க. தேவராஜ், கோலாகங்சார் தொகுதி தலைவர் . எம். இராமசந்திரன், தைப்பிங் தொகுதி துணை தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமான . எம். வீரன், ஈப்போ தீமோர் தலைவர்  பி. தமிழ் செல்வன், தம்புன் தொகுதி தலைவர் . ஆறுமுகம், மாநில ம. இ. கா ஆட்சிகுழு உறுப்பினர்  பெ. பாலையா மற்றும் பேரா மாநில தொகுதி பொறுப்பாளர்கள், ஈப்போ பாராட் தொகுதி கிளை தலைவர்கள் மற்றும் புந்தோங் வட்டார பொது மக்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here