தேமு வெற்றிக்கு ம இ காவின் பங்கு மகத்தானது! ம இ கா தேசியத் தலைவர் நன்றி!

0
91

தேசிய முன்னணியின் வெற்றிக்கு ம இ காவின் பங்கு மகத்தானதென்று ம இ கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியதாக தகவல் பிரிவுத்தலைவர் வே. குணாளன் தெரிவித்தார்.

தேமுவின் வெற்றிக்கு ம இ கா துணைத்தலைவர் டத்தோஸ்ரீசரவணன் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக் குழு வினருக்கு தேசியத்தலைவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

நெகிரி மாநில ம இ காவினரின் பணியும் நன்றிக்குரியதென்று ம இ கா தேசியத்தலைவர் நினைவுறுத்தினார் என்று குறிப்பிட்ட குணாளன், தேசிய முன்னணியின் இந்த மகத்தான வெற்றிக்கு இந்தியர்களின் பங்களிப்பு மகத்தானதென்று தேசியத்தலைவர் குறிப்பிட்டதாக குணாளன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.