ஆபாச வீடியோவில் அமைச்சருடன் இருப்பது நானே! ஆடவர் பரபரப்பு வாக்கு​மூலம்

0
55

கோலாலம்பூர், ஜுன், 12-      ஆபாச ​​​வீடியோ கா​ணெளி காட்சியில் ஓ​ர் அமைச்சருடன் ஒரே படுக்கையில் இருக்கும் நபர் தாமே என்று ஓர் ஆடவர் அதிர்ச்சி வாக்குமூலத்தை  அளித்திருப்பது நாட்டில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடி​யோ  காணொளி வெளியான 24 மணி நேரத்தில் ​மூலத்தொழில் துறை அமைச்சின்  அதிகாரிகளில் ஒருவரான முகமட் ஹவீஸ் அப்துல் அஜிஸ் என்பவர், அதில் உள்ள ஆடவர் தாமே என்று ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த படுக்கையறை காட்சியில் தம்முடன் இருப்பவர் ஓர் அமைச்சர் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த ஆடவரின் வாக்குமூலம் இன்று காலை அவரது முக நூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் அவர், அந்த அமைச்சரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சரின் கருத்தை அறியாமல் அவரது பெயரை வெளியிடுவது முறையல்ல என்று ஊடகங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

கடந்த மே  3 ஆம்  தேதி சபா, சண்டக்கான் இடைத்தேர்தலில் போது பிரபல ​ஹோட்டல் அறை  ஒன்றில், எடுக்கப்பட்ட வீடியோ  படம் அதுவென்றும், இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த ஆடவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here