சட்டத்தின் முன் டத்தோஸ்ரீ நஜிப்பை நிறுத்தலாம்

0
299

பிரதமர் எனபதை மகாதீர் மறக்கக் கூடாது!

துன் மகாதீர் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து தனது அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டுக்கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக வலுத்து வருகிறது,அதாவது அவர் பிரதமராகும்,அவர் அதை மறந்து ஒரு புலன் விசாரணை அதிகாரியாக மாறிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீது; 1எம்டிபி வழக்கு  குறித்த விசாரணையை ஊழல்தடுப்பு வாரியம் மேற்கொண்டுள்ளது, அதற்குச் சட்டத்துறை அலுவலகம் குற்றத்தின் அடிப்படையில் வழக்கைப் பல பிரிவுகளில், கவனம் செலுத்தி நடவடிக்கை வேண்டியப் பொறுப்பிலும் உள்ளது.போலீசும் தனக்குரிய வரம்புகளில் வழக்குகளில் நுழையவேண்டிய அதிகாரமும் இருக்கிறது. 

இதற்கிடையில்,வெளிநாடுகளில் உள்ள பணத்தைக் கண்டறியவும், அப்படியிருந்தால் அவற்றை மீட்டெடுக்க வேண்டி தனிக்குழுவும் அமைக்கப்பட்டு , விசாரணையையும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே,, இதுவரைக்குமான நடவடிக்கையில்,அல்லது, நடவடிக்கைக்குழுவிலும் ,சில வாரியத்திலும்கூட, ஒரு தலைப்பட்ச  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருதாகவே தெரிகிறது.

அதாவது;  நஜிப்பின் கடந்த கால ஆட்சியில், பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், அல்லது;ஏதோவொரு காரணத்திற்காக அரசாங்கப்பொறுப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களையெல்லாம் ,இன்று,ஒன்றிணைத்து,நஜிப்பை முடித்துக்கட்டுவதற்கான அடிப்படையில் விசாரணை வலையத்திற்குள் அத்தகையோரை புகுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

எனவே விசாரணை வட்டத்திற்குள் அவர்களை இன்று நிறுத்தியிருப்பதாலே, எந்தவகையில்,  விசாரணையும் குற்றச்சாட்டுகளும்  நீதியை நிலைநாட்டுவதற்கான நல்ல தோற்றத்தைப் பெற முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

            ஒரு முன்னாள் பிரதமர் மீது, குற்றச்சாட்டுகளைக்கொண்டு வரும் போது,கண்டிப்பாக அதிலொரு  வெளிப்படைத்தன்மை அவசியமாகத் தேவைப்படுகிறது. அப்படியில்லாத போது ,தண்டனைக்கு மட்டுமே உட்படுத்த வேண்டி,ஜோடிக்கப்பட்ட வழக்காக அது ஏன் இருக்கக்கூடாது என்ற கேள்விக்குப்பதில் சொல்ல வேண்டிதான்  வரும்.

குறிப்பாக முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மீது, அதிகாரத்தைத் தவறாகப்பயன் படுத்தினார் என்று தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்ட முக்கியச்சாட்சிகளில் பெரும்பாலோர்,அன்வாரிடம் முரண்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள்.

ஒரு துணைப்பிரதமருக்கும் அவரின் கீழ் பணியாற்றுகின்றவர்களுக்குமான அதிகார வரம்பு எது, எவையென்று திட்டமிட்டுத் தீர்மானிக்க முடியுமென்றாலும்; அதற்கான வழக்கொன்றைப் பதிவு செய்யும் போது; அந்த வழக்கில் தண்டனைப்பெற்று சிறைக்குப்போக வேண்டியிருந்து.

பின்னர் அன்வார்,  சிறைக்குச்செல்ல தான் காரணமில்லையென்று அண்மையில்நடைபெற்ற பல தேர்தல் கூட்டங்களில்  மகாதீர் குறிப்பிட வேண்டிவந்தது.அதற்காக மகாதீர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார், அதேபோன்றுதான் முன்னாள் தலைமை நீதிபதி, சாலேஅபாசை, பதவியிலிருந்து நீக்கியது தானல்லவென்றும் மாமன்னர்தான் காரணமென்றார் மகாதீர்.

அதாவது,மன்னர் சாலே அபாசை நீக்கவேண்டும் என்ற பரிந்துரையை தந்தது யார்? என்பதுதான் முக்கியம்!பிரதமர் நீக்கச்சொல்லி பரிந்துரைத்தால், மாமன்னரின் அடுத்த வேளை என்னவாகயிருக்கும்? எனவே நீக்கம் முக்கியமல்ல!பரிந்துரைதான் முக்கியமாகும்!

எனவே, இப்போது நமது நாட்டின் பிரதமருக்கு 93 வயதாகும்,அப்படிப்பட்டவருக்கு உடல் கூற்றின் அடிப்படையில் சில மாற்றங்கள் ஏற்படவே செய்யும்,சில வேளைகளில் மனபலமிருக்கலாம், உடல் பலம் ஒத்துழைக்குமா? இப்படியொரு கேள்வி மருத்துவ அடிப்படையிலே எழவே செய்யும்.

அதனால்தானோ என்னமோ தெரியவில்லை, ஏசிஏ அறிவிக்க வேண்டியதையும் போலீசு தெரிவிக்க வேண்டியதையும் மகாதீர் ஒரு புலன்விசாரணை அதிகாரியாக நினைத்துக்கொண்டு, , நஜிப் மீதும், அவர் துணைவியார் ரோஸ்மா  மீதான குற்றச்சாட்டுகளையும் அள்ளிவீசுகிறார்.

அதாவது ,முதலில் நீதிமன்றத்தில்  குற்றச்சாட்டுகள் வரவாகி, பின்னர் வழக்காகி,அந்த வழக்கிலே ஆதாரங்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டு, எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் பல கேள்விகளுக்கு,குற்றம் சுமத்தும் அரசுத்தரப்பு விளக்கம் சொல்லி, அந்த வழக்குக்கு உயர்நீதி மன்றங்கள், அதன்பின்னர் உச்சநீதிமன்றங்கள் வரைக்குமாகப்போய் ,நஜிப் குற்றவாளியா? அல்லது குற்றமற்றவரா? என்றதொரு தீர்ப்பை வழங்கும் வரைக்குமான கட்டமைப்புகளை கடந்து போக வேண்டியுள்ளது.

நாட்டின் அரசியல் அமைப்புச்சட்டப்படி,ஒரு நாட்டுக்குடிமகன் மீது எந்தமாதரியான குற்றச்சாட்டுகளையும் முன் வைக்க உரிமையிருப்பது போலவே,அந்த குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர், அதை எதிர்கொண்டு ,குற்றமற்றவர் என்று நிருபிக்க வேண்டிய உரிமையுமுண்டு! என்பதை மகாதீர் போன்ற மேதைகள் கண்டிப்பாக உணர வேண்டும்.

அவர் தற்போது நாட்டின் பிரதமர் என்பதாலே, தனது காழ்ப்புணச்சியை எந்தவகையிலும் சட்டத்தின் முன் நிறுத்தக்கூடாது.அப்படி நிறுத்திவிட்டு பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்ளக்கூடாது.

எனவே சட்டத்தின் முன் குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ,  அதேபோன்று,தனக்குள்ள கோபத்தையும் எரிச்சலையும் குற்றச்சாட்டுகளிலும்,சட்டத்திலுள்ள ஓட்டைகளிலும் திணித்திடவும் எண்ணிடக் கூடாது.

எனவே, நாட்டுமக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்து, அவர்களுக்கான தேவைகளை புதிய அரசு செய்து முடிக்கும் என்ற எதிர்பார்ப்போடுக் காத்திருக்கிறார்கள். அப்படிக் காத்திருக்கும் மக்களின் கண்கள் பூத்துப்போகவிடக்கூடாது அல்லவா?

எனவே,குற்றவாளிகளைச்சட்டத்தின் முன் நிறுத்துங்கள்,அவர்கள் குற்றவாளிகளாயென்று  நீதிமன்றங்கள் தீர்மானிக்கட்டும், நாட்டுப்பிரதமரான மகாதீருக்கு  ஏன் தேவைற்ற போலிசு, ஏசிஏ வேலை?,

இப்படிச்செய்வதாலே யாருடைய அதிகாரத்தில் யார் நுழைவது என்ற கேள்வி மக்களிடமிருந்து இன்று எழுந்துள்ளது. நாளைக்கு அவருக்குப்பிறகு இன்னொரு பிரதமர் பதவிக்கு வருவாரேயானால் மகாதீர்  அதிகார அத்துமீறல் செய்துள்ளார் என்று வழக்கேதும் பதிவு செய்து விடப்போகிறார்.?

எனவே, இப்படி, இவர் மீதும், அவர் மீதென்றும் வழக்குகளுக்கே காலத்தை விரயமாக வேண்டிவரும்,அப்புறம் மக்களை யார் கவனிப்பது?-

 

களத்திலிருந்து உங்கள்– சாணக்கியன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.