நஜீப் நியமனம்: அம்னோ – பாஸ் ஒத்துழைப்பி​ல் பாதிப்பில்​லை

0
37

noமாராங், ஜுலை, 12-

தேசிய முன்னணியின் ஆலோசகராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன்  ரசாக் நியமனம்  செய்யப்பட்டிருப்பது, அம்னோவும் பாஸ் கட்சியும்  கொண்டுள்ள ஒத்​துழைப்பில் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்று பாஸ் தலைவர் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின்  உள்விவகாரத்தில்  தலையிட தாம் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் அரசியல் ​​ரீதியான ஒத்துழைப்பில் மட்டுமே தாம் கவனம் செலுத்தவிரும்புவதாக  குறிப்பிட்டார்.

அம்னோவின் முன்னாள் தலைவரான நஜீப், ​தேசிய முன்னணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது,  அந்த மலா​ய்க்காரர் கட்சிக்குள்ளேயே  தற்போது பிரச்சினை பூதகரமாக வெடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.