அமைச்சரவை விரிவாக்கம் 13 அமைச்சர்கள், 23 துணை அமைச்சர்கள் பதவியேற்றனர்

0
229

கோலாலம்பூர்: இன்று புதிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்தானா நெகாராவில் காலை 11 மணியளவில் நடைப்பெற்றப்  பதவியேற்பு விழாவில் அகோங், யாங் தி பெர்துவான் சுல்தான் முகமது முன்னிலையில் 13 அமைச்சர்கள் மற்றும் 23 துணை அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், அவரது துணைவியார் துன் டாக்டர் சிட்டி அஸ்மா முகமட் அலி, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய அமைச்சரவைப் பட்டியல் பின்வருமாறு:

 1. சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் – இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்
 2. டாக்டர் முஜாஹிட் யூசுப் ரவா – பிரதமர் துறை அமைச்சர் (சமயம்)
 3. சேவியர் ஜெயகுமார் – நீர்வளம், நில மேம்பாடு மற்றும் இயற்கைவள அமைச்சர்
 4. சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் – உள்நாட்டு வணிக, பயனீட்டாளர் அமைச்சர்
 5. இக்னேஷியஸ் டேரல் லெய்கிங் – அனைத்துலக வணிக, தொழிலியல் அமைச்சர்
 6. சைபுடின் அப்துல்லா – வெளியுறவு அமைச்சர்
 7. பாரு பியான் – பொதுப் பணித் துறை அமைச்சர்
 8. இயோ பீ யின் – ஆற்றல், தொழில் நுட்பம், அறிவியல், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்
 9. தெரசா கோக் – முதன்மைத் தொழில்களுக்கான அமைச்சர்
 10. காலிட் சமாட் – கூட்டரசுப் பிரதேச அமைச்சர்
 11. லியூ வுய் கியோங் – பிரதமர் துறை இலாகா அமைச்சர் (சட்டத் துறை)
 12. முகமட் ரிட்சுவான் முகமட் யூசுப் – தொழில் முனைவர் மேம்பாட்டு அமைச்சர்
 13. முகமட் டின் கெதாப்பி – சுற்றுலா, பண்பாட்டு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்

துணை அமைச்சர்கள் பட்டியல் பின்வருமாறு

1) துங்கு சுல்புரி ஷா ராஜா புஜி – நீர், நில, இயற்கை வளம்
2) புஸியா சாலே – பிரதமர் துறை (சமயம்)
3) சோங் சியேங் ஜென் – உள்நாட்டு, வாணிப, பயனீட்டாளர் விவகாரம்
4) டாக்டர் லீ பூன் சாய் – சுகாதாரம்
5) ஆர் சிவராசா – நகர்புற மேம்பாடு
6) அமிருடின் ஹம்சா – நிதி அமைச்சு
7) எடின் சஹாஸ்லி ஷித் – தொடர்பு பல்லுடகம்
8) டாக்டர் ஷாருடின் முகமட் சாலே – கூட்டரசு பிரதேசம்
9) முகமட் அனுவார் முகமட் தாஹிர் – பொதுப்பணி
10) தியோ நி சிங் – கல்வி
11) ஸ்டீவன் சிம் – இளைஞர்&விளையாட்டு
12) ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின் – முதன்மை தொழிலியல்
13) சிம் ஸி ஸின் – விவசாயம் சார்ந்த தொழிலியல்
14) டாக்டர் முகமட் பாரிட் ராபிக் – பிரதமர் துறை (தேசிய ஒருமைப்பாட்டு சமூக நலம்)
15) முகமட் பக்தியார் வான் சிக் – சுற்றுலா, கலை, பண்பாடு
16) மாஹ்புஸ் ஓமார் – மனிதவளம்
17) ஹன்னா இயோ சியூ சுவான் – மகளிர்,குடும்ப, மேம்பாடு
18) டாக்டர் ஓங் கியான் மிங் – அனைத்துலக வாணிப தொழிலியல்
19) டாக்டர் முகமட் ஹத்தா முகமட் ரம்லி  – தொழில் முனைவோர் மேம்பாடு
20) முகமட் ஹனிபா மைதின் – பிரதமர் துறை (சட்டம்)
21) டத்தோ கமாருடின் ஜபார் – போக்குவரத்து
22) டத்தோ அசிஸ் ஜம்மான் – உள்துறை அமைச்சு
23) இஸ்னாராயிஸா முனிரா மஜிலிஸ் – எரிசக்தி, தொழில்நுட்ப, அறிவியமல், பருவநிலை மாற்றம்&சுற்றுச்சூழல் அமைச்சர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.